உங்கள் குழந்தையின் பள்ளிப் பேருந்து பாதுகாப்பானதா? கவனிக்க வேண்டியவை
பள்ளிப் பேருந்துகளுக்குத் தெளிவான தேசியப் பாதுகாப்பு விதிகள் உள்ளன. பல வேன்களும் ஆட்டோக்களும் இவற்றைப் பின்பற்றுவதில்லை. எதைக் கவனிக்க வேண்டும், ஏதாவது தவறாக இருந்தால் என்ன செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றமும் CBSE-யும் பள்ளிப் பேருந்துகளுக்குத் தெளிவான விதிகளை வகுத்துள்ளன. பள்ளிப் பேருந்து மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்; இரு பக்கமும் பள்ளியின் பெயரும், முன்னும் பின்னும் “School Bus” என்றும் எழுதப்பட்டிருக்க வேண்டும். வாடகைப் பேருந்தில் “On School Duty” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
விதிகள் என்ன சொல்கின்றன
- வேகக் கட்டுப்பாட்டுக் கருவி (speed governor), பேருந்து மணிக்கு 40 கி.மீ.க்கு மேல் போக முடியாதபடி.
- பயிற்சி பெற்ற உதவியாளர் பேருந்தில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; ஓட்டுநர் மட்டும் போதாது.
- முதலுதவிப் பெட்டியும் வேலை செய்யும் தீயணைப்புக் கருவியும்.
- பூட்டக்கூடிய கதவுகள், பேருந்து ஓடும்போது மூடியே இருக்க வேண்டும்.
- தொடர்பு விவரங்கள் தெரியும்படி, உள்ளேயும் வெளியேயும்: ஓட்டுநரின் பெயர், லைசென்ஸ் நம்பர், பள்ளியின் போன் நம்பர்.
- வெளியாட்கள் ஏறக் கூடாது. ஓட்டுநர், கண்டக்டர், உதவியாளர், பெற்றோர் மட்டுமே ஏறலாம்.
இந்த விதிகளைப் புறக்கணிக்கும் பள்ளிகள் தங்கள் இணைப்பை (affiliation) இழக்கலாம் என்று CBSE எச்சரித்துள்ளது. பல மாநிலங்கள் பள்ளிப் பேருந்துகளில் GPS, CCTV இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றன, எனவே உங்கள் மாநிலத்தில் என்ன தேவை என்று கேளுங்கள்.
வேன்களும் ஆட்டோக்களும்
பெரும்பாலான பிரச்சனைகள் தனியார் வேன்களிலும் ஆட்டோக்களிலும்தான் நடக்கின்றன: அளவுக்கு மீறிக் குழந்தைகளை அடைப்பது, உதவியாளர் இல்லாதது, ஓட்டுநரை யாரும் சரிபார்க்காதது. உங்கள் குழந்தை இப்படிப் பயணித்தால், அந்த வாகனம் அங்கீகரிக்கப்பட்டதா என்று பள்ளியிடம் கேளுங்கள், அதில் எத்தனை குழந்தைகள் பயணிக்கிறார்கள் என்று எண்ணிப் பாருங்கள், ஓட்டுநரை நீங்களே நேரில் சந்தியுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் பஸ் ஸ்டாப்பில் சில முறை பேருந்தைக் கவனியுங்கள். பயணம் எப்படி இருக்கிறது, ஏதாவது கவலைப்படுத்துகிறதா என்று உங்கள் குழந்தையிடம் கேளுங்கள். பிரச்சனைகளைப் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் எழுப்புங்கள், அல்லது தலைமை ஆசிரியருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து, அதன் நகலை வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய பாதுகாப்புக் குறிப்புகளை WhatsApp-ல் பெறுங்கள். எளிய மொழியில் சுருக்கமான தகவல்களுக்கு எங்கள் WhatsApp சேனலைப் பின்தொடருங்கள். உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது.
WhatsApp-ல் பின்தொடருங்கள் (புதிய டேப்பில் திறக்கும்)ஆதாரங்கள்
- Circular on fire safety and transport precautions in schools (2012) (புதிய டேப்பில் திறக்கும்) (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) · ஆங்கிலத்தில்)
- Make school buses safe or lose affiliation (புதிய டேப்பில் திறக்கும்) (Deccan Herald · ஆங்கிலத்தில்)
இந்தப் பதிவு பொதுவான தகவல் மட்டுமே. விதிகள் மாநிலத்துக்கு மாநிலமும் கல்வி வாரியத்துக்கு வாரியமும் மாறுபடலாம், எனவே உங்கள் பள்ளியின் சொந்தத் திட்டம் பற்றி அவர்களிடமே கேளுங்கள்.